விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ரிசல்ட்: அமைச்சர் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2023

விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ரிசல்ட்: அமைச்சர் தகவல்

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதனிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்வரி 25ல் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் 10 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

 


இதனால் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிப்படைந்தனர்.தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், தாமதத்திற்காக காரணம் குறித்த அறிக்கை இன்று (டிச.,15) மாலை வெளியாகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459