யூ.டி.சி., பதவி உயர்விற்கான தேர்வினை 12 பேர் மட்டுமே எழுதினர்.
புதுச்சேரி அரசு துறைகளில் 1,050 யூ.டி.சி., பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 45 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன.
அதுமட்டுமின்றி எட்டு ஆண்டுகள் எல்.டி.சி.,யாக பணிபுரிந்து கணக்கு தேர்வு, பொது துறை தேர்ச்சி பெற்றவர்களுக்கு யூ.டி.சி.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டு பணிபுரிந்து, கணக்கு தேர்வு,பொது துறை தேர்வினை எழுதிய எல்.டி.சி.,க்களுக்கு10 சதவீதம் யூ.டி.சி.,பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் அளிக்கப்படுகின்றது.
இந்த 10 சதவீத இடங்களுக்கு 103 பேர் விண்ணப்பித்திருந்த சூழ்நிலையில், லாஸ்பேட்டை அரசு வள்ளலார் மேனிலைப்பள்ளியில் நேற்று துறை ரீதியான தேர்வு நடந்தது. அதில், 12 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். 91 பேர் வரவில்லை.
என்ன காரணம்?
யூ.டி.சி.,தேர்வினை எழுத 103 பேர் விண்ணப்பித்து இருந்தாலும், அவர்களில் 91 பேருக்கு அண்மையில் யூ.டி.சிகளாக பதவி உயர்வு கிடைத்தது. எனவே பதவி கிடைக்காத மீதமுள்ள 12 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு மையத்தினை நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment