TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/11/2023

TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு

 .com/

அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7; மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என, மொத்தம், 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது;


அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459