TNPSC - வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி அலுவலர் பணி - LAST date 24.12.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/11/2023

TNPSC - வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி அலுவலர் பணி - LAST date 24.12.2023


 தமிழ்நாடு வேளாண்மை, தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள 263 உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 


இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பணிகளில் 84 காலி பணியிடங்கள்


, தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் 179 காலி பணியிடங்கள் என 263 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடக்கும். இதற்கான தேர்வுக்கு வருகிற டிசம்பர் 24ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in,www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். தேர்வுக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது. 7ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். அதாவது பகுதி ‘‘அ”வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ” பொது அறிவு(10ம் வகுப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. கணினி வழி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும். 

இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459