School Morning Prayer Activities - 22.11.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/11/2023

School Morning Prayer Activities - 22.11.2023

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:303


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.


விளக்கம்:


யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.


பழமொழி :

Good and Bad are not due others


நன்றும் தீதும் பிறர் தர வாரா.


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


முடியாது என்ற வார்த்தை

முட்டாள்களினால் மட்டுமே

பயன்படுத்தப்படும் வார்த்தை..

அந்த வார்த்தையை நீ

பயன்படுத்தாதே.


பொது அறிவு :


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு . 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


கொண்டு, அதற்காக அடுப்பை எரிப்பதற்குத் துவரஞ் செடியின் காய்ந்த தண்டுகளை விறகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதனைத்தான் குழந்தையைச் சமைத்துக்கொண்டு தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்” என்றார் சிறுமியின் தந்தை.


“நீங்கள் மண்ணுடன் மண்ணைச் சேர்க்கச் சென்றதாகக் கூறினாளே” என்றார் பீர்பால்.


“என்னுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரைச் சுடுகாட்டில் தகனம் செய்வதற்காகப் போயிருந்தேன். உயிர் போன பிறகு இந்த உடம்பு மண்ணோடுதானே சேர்ந்து விடுகிறது! அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றார்.

உங்கள் மனைவி ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள் என்றாளே” என்றார் பீர்பால்.


“பக்கத்து வீட்டில் உளுந்து உடைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அங்குச் சென்று உளுந்து உடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்” என்றார்  அந்தச் சிறுமியின் தகப்பனார்.


இந்தப் பதில்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீர்பால் “அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள் இவர்களே’ என்று கருதினார். அக்பர் சக்கரவர்த்தி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு.


“மேல மூடி கீழே மூடி


 நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது.


இது என்ன?என்று கேட்டார் பீர்பால்.


இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் தந்தை, “ இரண்டு மூடிகள் என்றால் ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி. மெழுகுத் திரி என்பது மனிதன். பூமியில் மனிதன் வாழ்ந்து  இறந்து விடுகிறான். இதுதான், இந்தப் புதிருக்கு விடை” என்று கூறினான்.


இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பீர்பால் தம்மால் இயன்ற பொருள்களைச் சன்மானமாக அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்தார்.


மறுநாள் அரச சபைக்குச் சென்ற பீர்பால், அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்கான விடையைக் கூறினார்.


அதைக் கேட்ட சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.


பீர்பாலின் அறிவுத் திறனைப் பாராட்டி அக்பர் சக்கரவர்த்தி, பொன்னையும் மணியையும் பரிசாக வழங்கினார். பீர்பால் தாம் அதைப் பெற்றுக் கொள்ளாமல், தமக்கு அந்தப் புதிருக்கு உரிய விளக்கத்தைக் கூறிய குடும்பத்தவரை வரவழைத்தார். “இவர்களே அந்தப் பரிசுக்கு உரியவர்கள்” என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறினார். அக்பர் சக்கரவர்த்தி வழங்கிய பரிசை அந்தக் குடும்பத்தவர் பெற வழிசெய்தார். பீர்பாலின் நேர்மையை வியந்து பாராட்டிய அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார்


இன்றைய செய்திகள் - 22.11.2023


*போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு லண்டனில் விருது.


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள்;


அமைச்சர் தகவல்.


* நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது மதுரை ஐகோர்ட் அதிரடி.


*ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.


* பின்னணி பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


* ஐசிசி- இன் புதிய விதிமுறை: முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் வந்து வீச்சு அணி அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். அப்படி தயாராகாமல் இருப்பது மூன்றாவது முறையாக நிகழும் போது, 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.


TEACHERS NEWS
Today's Headlines


* Chennai Metro Rail was  Awarded in London for its continuous involvement in activities beneficial to the environment, not only just transportation.


 * 2,700 special buses for Tiruvannamalai Karthikai Deepa festival;  Minister Information.


 * Madurai High Court –cannot order to give Patta to those who are encroaching on water bodies a striking action.


 *Minister Anbil Mahesh Poiyamozhi surprise visit to  Erode district government schools.


 * Playback singer P Susila was awarded an honorary doctorate degree by Chief Minister M K Stalin.


 * ICC's new rule: The batting team must be ready to bowl the next over within 60 seconds of the previous over.  The third occurrence of such unpreparedness will result in a penalty of 5 runs to the bowling team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459