திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்.
விளக்கம்:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?
பழமொழி :
God is love
அன்பே கடவுள்
இரண்டொழுக்க பண்புகள் :
1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
என்னைப் பற்றி போற்றி பாடுபவர்களை விட, என்னை கடுமையாக விமர்சிப்பவர்களால் தான் நான் அதிகம் நன்மை பெற்றுள்ளேன். - காந்தியடிகள்
பொது அறிவு :
1. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?
விடை: விஜயலட்சுமி பண்டிட்
2. வேங்கையின் மைந்தன் என்று புத்தகத்தை எழுதியவர்?
விடை: அகிலன்
English words & meanings :
yern - quick விரைவாக. yield - produce தயாரித்தல், விளைச்சல்
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.
நவம்பர் 20 இன்று
திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
நீதிக்கதை
முரட்டு சிங்கம்:-
ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன.
காலம் காலமாக பல வகையான மிருகங்களும் ஒரே இடத்தில் இருந்து வந்ததால் இவை ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ள சிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது.
அதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால் அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலாவி வந்தது.இருப்பினும் காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன் முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகி வந்தது. அவையும் தனியாக வாழும் முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன
இச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக மான்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த்து.ஒரு நாள் தன் குட்டியை தேடி கொண்டு தாய் மான் சென்றது.அங்கே அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கி நடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில் முதலை ஒன்றுடன் உயிருக்கு ஒரு சிங்கம் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.
இது நம்முடன் இருந்த முரட்டுச் சிங்கம்தான் என அறிந்து, உரத்த குரலில் சப்தமிட்டது.
இந்த சப்தம் கேட்டு, காட்டிலுள்ள மற்ற மான்களும்,குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.
முரட்டுச் சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள் அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும் என சொல்லி சென்றுவிட்டன.
ஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக் கேட்காமல் அதன் மீது இரக்கம் காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டி மான்களிடம் கூறின
அத்திட்டத்தின்படி,இதுவும் நல்ல யோசனைதான் என அறிந்த குரங்குகள் மான்கள், மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றை எடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்த குழியில் போட்டு, "ஏய்.... சிங்கமே நீ இதை உன் வாயால் கவ்விப் பிடித்துக் கொள். உன்னை மேலே நாங்கள் தூக்கி காப்பாற்றி விடுகிறோம்" எனக் கூறின.
அவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு ஏறி பாதி குழி வரும் போது, கொடி அறுந்து மீண்டும் குழிக்குள் விழுந்துவிட்டது.இதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கி ஒன்றாகக் கயிறு போல் திரித்து கீழே போட்டன. மான்கள் அதை சுருட்டிக் கொண்டு போய் மீண்டும் குழிக்குள் போட்டன. முரட்டுச்சிங்கம் அந்தப் பலமான கொடியைப் பிடித்துக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தது.
தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கிய குரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறியது. நாம் நயவஞ்சமாகப் பழகி மான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றிய செயல் கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.
தன் உயிர் உள்ளவரை தன் பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும்,
அன்றிலிருந்து தனக்கு ஏற்பட்ட துன்பம் ஒரு பாடம் எனக் கருதி மற்ற சிங்கங்களுடன் திருந்தி வாழவும் முடிவு செய்தது முரட்டு சிங்கம்.
இன்றைய செய்திகள் - 20.11.2023
*கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
*பொங்கலூரில் இயற்கை மருத்துவம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
*கிறிஸ்துவ வாரிசுரிமை சட்டத்தின்படி மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது ஐகோர்ட்டு தீர்ப்பு.
*கன்னியாகுமரி: சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்தும் நிறுத்தம்.
*உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
Today's Headlines
*Announcent regarding apply for assistant post vacancies in co-operative societies.
*Naturopathy awareness rally was held in Pongaloor.
*According to the Christian Inheritance Act, the mother has no share in the son's property, the Highcourt gave judgment.
* Kanyakumari: Tourists disappointed not being able to see the sunrise. Boat traffic also stopped due to rough seas.
*Cricket World Cup 2023: Australia won the final against India and won the trophy.
Prepared by
Covai women ICT_போதிமரம்
TEACHERS NEWS |
No comments:
Post a Comment