SBI வங்கியில் Clerk வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்கள்- 8283 Last date :7.12.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/11/2023

SBI வங்கியில் Clerk வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்கள்- 8283 Last date :7.12.2023

SBI ஆள்சேர்க்கையின் மூலம் 8,283 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள்சேர்க்கை அறிவிப்பு இதுவாகும். எனவே, அரசு வேலையை தங்கள் கனவாக கொண்டவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

 வயது வரம்பு: 01.04.2023 அன்று 28 வயதுக்கு கீழ் உள்ள பட்டதாரிகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் . இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்பிஐ அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 171 ஆகும். இதில், 75 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 46 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 17 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 32 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 1 இடம் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் 

 தெரிவு செய்யப்படும் முறை: இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலைத்தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு(Mains) என 2 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வானது நவம்பர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது டிசம்பர்/பிப்ரவரி 2023 அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 விண்ணப்பம் செய்வது எப்படி? 07.12.2023 ஆம் தேதிக்குள் sbi.co.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியல் சாதிகள்,


பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Job Notification Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459