பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்த வலியுறுத்தி மாநி லம் தழுவிய அளவில் நான்கு கட்ட போராட் டம் அறிவித்துள்ள சி.பி. எஸ்., ஒழிப்பு இயக்கம் 2024 பிப்.,8 ல் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்று கையிட உள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத் தப்பட்டு 2003 ஏப்., 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6.50 லட் சம் பேர் பணியில் சேர்ந் துள்ளனர். இதில் பெற்றவர்கள், இறந்தவர் கள் என 35 ஆயிரம் பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு (ஒரு முறை)
செட்டில்மென்ட் மட்டும் ஓய்வூதியத்திட் தான். மற்றபடி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப் படுவதில்லை.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து போராடி வருகிறது.
இயக்க மாநில நிர்வா கிகள் ஆலோசனை கூட் டம் காணொலி வாயி லாக நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடெரிக் ஏங்கல்ஸ், செல்வகுமார், ஜெயராஜ ராஜேஸ்வரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியத்திட் டத்தை நிறைவேற்ற கோரி டிச., 2 ல் மாவட்ட தலைநகரங்களில் குடும்பத்தி னருடன் பட்டினி போராட் டம், டிச., 27 ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், 2024 ஜன., 21, 22 ல் தற் செயல் விடுப்பு, பிப்., 8 ல் சென்னை முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகை போராட்டங்களில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறிய தாவது: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு வருகிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட் டால் அதன் விளைவுகள் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment