காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/11/2023

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

 Tamil_News_large_3479819

அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், சென்னையில் உள்ள 358 பள்ளிகளில் படிக்கும், 65,030 மாணவர்கள் பயனடைகின்றனர்.


மாநிலம் முழுதும் உள்ள, 30,995 அரசு பள்ளிகளில் படிக்கும், 18 லட்சத்து 53,595 மாணவ - மாணவியர் பயனடைகின்றனர்.


இதுகுறித்து, சமூக நலத்துறை இயக்குனர் அமுதவல்லி கூறியதாவது:


காலை உணவு திட்டத்தால், வேலைக்கு செல்லும் ஏழைப் பெண்கள், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் சுமையில் இருந்து விடுபட்டுஉள்ளனர்.


காலை 8:00 மணிக்கு உள்ளாகவே, குழந்தைகள் பள்ளிக்கு வந்து விடுகின்றனர். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விடுப்பு இல்லாமல், பள்ளிக்கு வந்து விடுகின்றனர். பெற்றோரும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த திட்டத்தை மேம்படுத்த, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம் . ஒவ்வொரு மாவட்ட மற்றும் வட்டார அளவில், மூன்று நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


கலெக்டர்கள் குறைந்தபட்சம் 20 மையங்கள்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குறைந்தபட்சம் 40 மையங்கள் வரை, மாதந்தோறும் ஆய்வு செய்கின்றனர். தலைமை ஆசிரியருடன், மற்ற ஆசிரியர்களும், தினமும் காலை உணவை சுவைத்து, அவற்றின் தரம், ருசியை ஆய்வு செய்கின்றனர்.


இதுகுறித்து, 1800 4258971 என்ற தொலைபேசி எண்ணில் வரும் குறைகளையும், புகார்களையும், கலெக்டர்கள் விசாரித்து, நிவர்த்தி செய்கின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459