தமிழகம் முழுவதும் கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/11/2023

தமிழகம் முழுவதும் கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்




தமிழகம் முழுவதும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் கீழ் CPS ரத்து, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், சரண்டர் ஒப்படைப்பு ,காலமுறை ஊதியம், உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நவம்பர் 1 மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.



நாகப்பட்டினம் மாவட்டம்

இதில் நாகை அவுரி திடலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன் பழகன், சரவணன், முத்து சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருதுநகர் மாவட்டம் 


 விருதுநகர் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வை.ச.வைரமுத்து, குணசேகரன்,முத்தையா கருப்பையா விஜயபாலன்,கண்ணன்  ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைத்தினர்.


 கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தைகைவிட்டுபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். சரண்விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும். உயர்கல் விக்கான ஊக்க உயர்வு வழங்கிட வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.


21 மாத ஊதிய மாற்றநிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். 2002-4 தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண் டும். சாலை பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக வரைமுறைப்படுத்த வேண் ஊதியடும். சத்துணவு ஊழியர்க ளுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்தவாறு கோஷங்களை எழுப்பினர்.



வேலூர் மாவட்டம்

பழைய ஓய்வூதிய திட் டம் நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்ட அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி, வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ. சீனிவாசன், சகேயுசத்யகு மார், ஜி.சீனிவாசன், எம். ஜெயகாந்தன் ஆகியோர் தலை மை தாங்கினர். மாநில உயர்மட்ட உறுப்பினர்கள் ஜனார்த்தனன், குழு செ.நா. அ.சேகர், துரை.கருணாநிதி, முகமது ஷாந வாஸ், க.கோபி, எஸ். காந்தி, மாவட்ட நிர்வாகி கள் வேலு, மகேஸ்வரி, மலர்விழி,வாரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், பங்கேற்பு புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்ப டுத்த வேண்டும். காலவரை யின்றி முடக்கி வைக்கப்ப ட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக கோருகின்றோம். வழங்கிட இடை நிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களக் கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங் கப்படாமல் இழைக்கப் பட்டுவரும் அநீதிகளையப் பட வேண்டும்.



முதுகலை ஆசிரியர்கள்,
அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்ப ணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருட னுக்கான ஊதிய முரண் பாட்டினை களைய வேண் டும். கல்லூரி பேராசிரி யர்கள் நிலுவயிலுள்ளபணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், மேல்நிலைப்பள் ளிகளில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களைப் பட் டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதி யம் பெற்ற வரும் சத்து ணவு, அங்கன்வாடி, வரு வாய்கிராமஉதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறை யில் பணியாற்றும் துப்புர வுப் பணியாளர்கள், எம். ஆர்.பி. செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள், ஆகி யோருக்கும் வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாளர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசி ரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைக் ளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 5 வட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடு வதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.



தனியார் வெளி முகமை ஒப்பந்தம், தற்கா லிகம், உள்ளிட்ட முறை களை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங் களில் நிரப்பிட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலு வைத் தொகை ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்ப ட்டுள்ளதை வழங்கிட உடனடியாக வேண்டும் 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியம னம் செய்யப்பட்ட ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்கா லத்தினை அவர்கள் பணி யில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண் டும். சாலைப் பணி யாளர்க ளின் 41 மாத பணிநீக்கக் காவத்தினைமுறைப்படுத்த வேண்டும் போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட் டன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459