மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வரும்' 17ம் தேதி நடக்கிறது. தேர் தல் பணியில் அரசு ஊழி யர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்னா மாவட்டம், அமர்பதான் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசி ரியராக பணியாற்றி வந்த வர் அகிலேஷ் குமார் மிஸ்ரா (35).
மற்ற ஆசிரியர்கள் போல் இவருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பான பயிற்சி, சட்னா மாவட்டத்தில் கடந்த மாதம் 16, 17ம் தேதிகளில் நடத்தப்பட் டது. ஆனால், இந்தப் பயிற்சியில் அகிலேஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, அவ ருக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசில், 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் நீங்கள் மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொண்டுள்ளீர்கள். உங்களை ஏன் பணீ நீக்கம் செய்யக் கூடாது’ கேட்கப்பட்டிருந்தது. என
இதற்கு அகிலேஷ் குமார் அனுப்பிய பதிலில், 35 வயதாகிவிட்ட எனக்கு இன்னும் திருமணம் நடக் கவில்லை. அதனால், எனக்கு முதலில் திரு மணம் நடக்க வேண்டும். மேலும், ரூ. 3.5 லட்சம் வரதட்சணை கொடுக்க வேண்டும். எனக்கு ரேவா மாவட்டத்தில் வீடு வாங்க கடனுதவி தேவை. நான் என்ன செய்வேன்' எனகூறியிருந்தார்.
இதை படித்த மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந் தது.
தேர்தல் பணிக்கு வராதது தவறு. வரதட் சணை கேட்பது அதைவிட தவறு' என கூறி, அகிலேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கலெக் டர் அனுராக் வர்மா உத் தரவிட்டார்.
இது பற்றி அகிலேஷ் குமாருடன் பணியாற்றும் ஒருவர் கூறுகையில், திரு மணமாகாததால், கடந்த சில ஆண்டுகளாகவே, அகிலேஷ் குமார் மன அழுத்தத்தில் இருந்து வந் தார். செல்போனை கூட அவர் பயன்படுத்தவதி ல்லை, இப்போது அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை' என்றார்.
No comments:
Post a Comment