சத்துணவு தினசரி அறிக்கை : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/11/2023

சத்துணவு தினசரி அறிக்கை : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு


அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459