ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி கூறியுள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணி காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்துக்கான போட்டித் தேர்வுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதில் சேர விரும்புவோர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை 0451-2904065 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment