அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, டிசம்பர் 20ம் தேதி, 'எமிஸ்' இணையதளத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மாவட்ட வாரியாக முன் ஆயத்த பணிகள், விறுவிறுப்பாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில், உபரி பணியிடங்களில் உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யுமாறு ஏற்கனவே, ஐகோர்ட்அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை எனும், 'எமிஸ்' இணையதளத்தில், பணிநிரவல் கலந்தாய்வு நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணி நிரவலுக்கு பிறகும், மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள், காலியிடங்களை, வரும் 29ம் தேதிக்குள், சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment