பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள ஏஐசிடிஇ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த ஏஐசிடிஇ முடிவு எடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளின் போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும் ஆய்வு முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கும் என்றும் ஏஐசிடிஇ அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஏஐசிடிஇயின் புதிய சலுகை சிறு மற்றும் நடுத்தர பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கலாக அமையும். அளவுக்கு அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்போது தரமான கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் வரும் நிலையில், ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகவும், சிறு கல்லூரிகளுக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment