தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் முறைக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும், என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய திட்டத்தை, தி.மு.க., அரசு பறித்துவிட்டது.
அதற்கு பதில் சொற்ப தொகையை ஒரு முறை மட்டுமே வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த உத்தரவை ரத்து செய்து ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படை, முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பதவி உயர்வு அளித்தல் என இரண்டு விதமான பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. இதை அரசு பரிசீலிக்க வேண்டும். பட்டதாரி, தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
TEACHERS NEWS |
தினமலர் செய்தி
No comments:
Post a Comment