100க்கு 8 மார்க்: பள்ளி மாணவியை கண்டித்த ஆசிரியர் | ஆசிரியருக்கு 3முறை பளார் விட்ட மாணவியின் தந்தை கண்டுகொள்ளாத கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்கள்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/11/2023

100க்கு 8 மார்க்: பள்ளி மாணவியை கண்டித்த ஆசிரியர் | ஆசிரியருக்கு 3முறை பளார் விட்ட மாணவியின் தந்தை கண்டுகொள்ளாத கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்கள்?

 திருப்பத்துார் அடுத்த விசமங்கலம் பனந்தோப்பு பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 575 மாணவர்கள் படித்து வரு கின்றனர். 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஆசிரியராக இருப் பவர் மகேஷ்வரன்.


2 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் ஆங்கில விடைத்தாள் வழங்கப்பட் டுள்ளது. அப்போது கோடி யூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவர் 100 மார்க் குக்கு 8 மார்க் மட்டும் எடுத்துள்ளார். இதனால் ஆசிரியர் மகேஷ்வரன், `அந்த மாணவி மிகவும் அந்த மாணவியிடம், 'படிக் காமல் இருந்தால் வாழ்வில் எப்படி முன்னேறுவது?” என அறிவுரை வழங்கி


'லேசாக' கண்டித்துள்ளார். அதில் மாணவியின் விரலில் லேசாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாணவி அழுது கொண்டே வீட் டுக்குச் சென்றுள்ளார்.


அதன் பின்னர் அன்று மாலை, ஆசிரியர் மகேஷ் வரன்,  மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத் துக்கொண்டிருந்த போது, அந்த மாணவியின் தந்தை, அங்கு வந்து, ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் 3 முறை அடித்துள்ளார். இதனால் அந்த ஆசிரியர் நிலை குலைந்து போயுள்ளார்.


அதன்

பின்னரும் விடாத அந்த தந்தை, மீண் டும் ஆபாச வார்த்தைக ளால் திட்டியபடியே பள்ளி யில் இருந்து கிளம்பியுள்ளா ர். இது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து சம்பந்தப் பட்ட ஆசிரியர் மகேஷ்வ ரனிடம் கேட்ட போது.

அந்த மாணவி குறைவான மதிப்பெண் எடுத்திருந்தார். அதற்கான நான் கண்டித்தேன்.


அதற்கு பள்ளிக்குள் வந்து, மாண வர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தை களால் திட்டி, கன்னத்தில் அடித்தது என்ன நியாயம்?.


என்னால் எப்படி மீண் டும் பள்ளியில் மாணவர் களை சந்தித்து பாடம் எடு க்க முடியும்?. இதனால் நான் விடுப்பு எடுத்து, வீட்டில் இருக்கிறேன்' என்றார்.


தலைமை ஆசிரியர் பழனிசாமியிடம் கேட்ட போது, 'ஆசிரியர் கண்டித் ததும் தவறு. அதற்காக அவர்கள் ஆசிரியரை அடித் ததும் தவறு. எங்கள் துறை உயர் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பியிடம் இது குறித்து பேசியுள்ளேன்' என்றார்.

மாணவர்கள் படிக்கா விட்டால், என்ன செய்து, அவர்களை படிக்க வைக்க முடியும்? எனத் தெரிய வில்லை. அதே நேரம். எதற்கெல்லாமோ கொடி பிடிக்கும் ஆசிரியர் சங்கங் கள் இந்தப் பிரச்னையில் மவுனமாக இருப்பதன் காரணம் தெரிய வில்லை.

மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை அடக்கி வாசி க்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு வாய் மொழி உத்தரவு பிற ப்பித் துள்ளதாகவும் கூறப்படு கிறது.


இதே நிலை தொடர்ந் தால், மாவட்ட பொது த் தேர்வு முடிவுகளைப் பார்த்து மற்றவர்கள் கை கொட்டி சிரிக்கும் நிலை ஏற்படும்.


இது குறித்து மாவட்டமுதன்மைக் கல்வி அலு வலர் முனிசுப்ராயனிடம் கேட்ட போது அந்த பள்ளி ஆசிரியர், தலைமை ஆசி ரியர் ஆகியோர் வாய் மொழியாகவே என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர் கள் எழுத்துப் பூர்வமாக என்னிடம் புகார் அளித் தால் நடவடிக்கை எடுக் கப்படும்' என்றார்.


இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது 

திருப்பத்துார் அரசு தலைமை மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, 'மாணவியின் விரலில் லேசாக வீக்கம் காணப் பட்டது. பிளாஸ்திரி போட்டால் சரியாகி விடும் எனக் கூறி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459