டிட்டோஜாக் - நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/10/2023

டிட்டோஜாக் - நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


IMG_20231011_143759

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோஜாக்) உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று தொடக்கக்கல்வி இயக்குநரின் அழைப்பை ஏற்று சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் (DPI) உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பேச்சுவார்த்தை நடந்துமுடிந்தது. 

தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி 13.10.2023 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் சார்பில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459