கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பி.சி., இ.டபிள்யூ.எஸ்., டி.என்.சி., ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்கள் 3093 பேருக்கு இந்தாண்டு வழங்கப்பட தேர்வு நடக்கவிருந்தது. தேசியத் தேர்வு முகமையால் செப். 29ல் நடத்தவிருந்த யஷஸ்வி நுழைவுத் தேர்வு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.
8ம் வகுப்பு, 10ம் வகுப்புகளில் 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, என்றார்
No comments:
Post a Comment