தமிழக மாணவர்களுக்கு பின்லாந்தில் பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

 




25/10/2023

தமிழக மாணவர்களுக்கு பின்லாந்தில் பயிற்சி

 பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சர் அனாமஜா ஹென்ரிக்சன் மற்றும் அதிகாரிகள், சென்னை வந்துள்ளனர்.அம்பத்துார் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சிகளை பார்வையிட்டனர்.


டாடா குழுமத்துடன் இணைந்து, 71 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ள, 'தொழில் 4.0' தரத்திலான தொழில்நுட்ப மையங்களையும், அசோக் லேலண்ட், மாருதி சுசுகி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, நவீன தொழில்நுட்ப பணிமனைகளையும் பார்வையிட்டனர்.


அதன்பின், தலைமை செயலகத்தில்,


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக மாணவர்கள் பின்லாந்திலும், பின்லாந்து மாணவர்கள் தமிழகத்திலும், திறன் பயிற்சி பெற, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யாபங்கேற்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459