பேரிடர் காலங்களில் மக்களுக்கு அனுப்பப்படும் ' செல் ஒலிபரப்பு எச்சரிக்கை ' நாடு முழுவதும் விரைவில் அமலாக உள்ளது . இதற்கான சோதனை நாளை நடத்தப்படவுள்ளது. பேரிடர் காலங்களில் அவசர கால தகவல்களை ஒரே நேரத்தில் அனைத்து செல்போன்களுக்கும் இதன் மூலம் அனுப்ப முடியும். நாளை சோதனை மெசேஜ் அனுப்பும்போது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.
SMS
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படும்
No comments:
Post a Comment