கலைத்திருவிழா போட்டிகள் முடிந்தபின் செலவின அறிக்கை சமர்ப்பிக்க SPD அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/10/2023

கலைத்திருவிழா போட்டிகள் முடிந்தபின் செலவின அறிக்கை சமர்ப்பிக்க SPD அறிவுறுத்தல்

 1143168

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்காக ரூ.4.4 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கின.


தற்போது வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த முறைபோல இந்த ஆண்டும் வட்டாரப் போட்டிகளுக்கு ரூ.30 ஆயிரம், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் முடிந்த பின்னர் செலவீன அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459