முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.
அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Scholarship apply online : Click Here
No comments:
Post a Comment