இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி எப்போது உள்ளிட்ட தேர்வு குறித்த முழு விவரங்களை கீழே பார்க்கலாம்
🟠பணி விவரம்: காலியாக உள்ள உதவி வயர்மேன் (உதவி மின் கம்பியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 06 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஐடிஐ (எலக்ட்ரிக்கல்/வயர்மேன்) முடித்து இருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியம் அளிக்கும் (எலக்ட்ரிக்கல் லைசன்ஸிங் போர்டு) 'H" சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். இந்த கல்வி தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிற கல்வி தகுதிகளை கொண்டவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
🟠சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 16,600 முதல் 52400/- வரை சம்பளமாக வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும் 45-வயது மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
🟠விண்ணப்பிப்பது எப்படி?: தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.10.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை " இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்-628215, தூத்துக்குடி மாவட்டம்" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொலைபேசி எண்: 04639-242221
🟠தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தினர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழ் பெற்று அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களுடன் சான்றிதழ் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்பப்டும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். முன் அனுபவத்திற்கான சான்று இணைக்க வேண்டும். வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 30.10.2023 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கான அறிவிப்பு அனுப்பப்படும்.
🟠Job Notification: Click Here
No comments:
Post a Comment