தீபாவளி மற்றும் தசார பண்டிகைகளுக்கு முன்பாக 4% அகவிலைப்படியை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி மற்றும் தசார பண்டிகைகளுக்கு முன்பாக 4% அகவிலைப்படியை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு உயர்வை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், மத்திய அரசு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், அறிவிக்கப்பட உள்ள அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு இந்த மாதத்திற்குள்ளாகவே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42 விழுக்காட்டில் இருந்து 46 விழுக்காடாக உயரும். இதனால் அவர்களின் ஊதியம் கனிசமாக உயரும்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது தற்போதைய நிலவரப்படி மாதம் 18ஆயிரம் சம்பளம் பெறும் ஊழியர் ஒருவருக்கு 7,560 ரூபாய் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. 4 விழுக்காடு உயர்வு வழங்கப்பட்டால் 8,640 ஆக அகவிலைப்படி உயரும்.
No comments:
Post a Comment