முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதி தேர்வுக்கு அக்.20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்களிடையே ஆராய்ச்சி திறனைவளர்க்கவும், புதிய ஆராய்ச்சி களை மேற்கொள்ளவதை ஊக்குவிக்கவும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்துக்கான தகுதி தேர்வு 2023-2024-ம்ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்புக்காக நிதியுதவி அளிக்கும் வகையில், தமிழகத்தை சார்ந்த தகுதியான மாணவர்களிடம் இருந்து 2023-24-ம் ஆண்டுக்கான முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in/) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே,விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக அக்.20-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment