நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.
புதுக்கோட்டை மாவட்டம் வாக வாசல் கண்ணப்பன் , ஒரு அரசு பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பகுதி நேர அடிப்படையில் 1975 ல் நியமிக்கப்பட்டார். தொகுப்பூயம் வழங்கப்பட்டது. நியமனம் செய்யப்பட்ட பணியை வரன்முறை செய்து உத்தரவிடக்கோரி கண்ணப்பன் உயர்நீதி மன்றக் கிளையில் மனு செய்தார்.
தனி நீதிபதி , " மனுதாரர் அனுப்பிய மனுவை நிராகரித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் , " என , 2020 பிப்.24 ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா , புதுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமிமுத்தழகு மீது நீதி மன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கண்ணப்பன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார் . காகர்லா உஷா , சாமிமுத்தழகு ஆஜராகினர்.
அரசு தரப்பு : ஏற்கனவே நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த கொரோனா காலகட்டம் என்பதால் , அப்போது உத்தரவை நிறைவேற்றுவதில் நடை முறைச் சிரமங்கள் ஏற்பட்டன.
ஆக . , 3 ல் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது எனதெரிவித்தார்.
காகர்லா உஷா நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது , என நகலை சமர்ப்பித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment