2009ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ரூ.3170 ஊதிய முரண்பாடு களைய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்குழு கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/09/2023

2009ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ரூ.3170 ஊதிய முரண்பாடு களைய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்குழு கோரிக்கை

 


  • 2006-2007ஆம் கல்வி ஆண்டுவரை மாவட்ட பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
  • 2006-2007ஆம் ஆண்டில் மொத்தம் 2353 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மார்ச்-2007ல் மாவட்ட பதிவு மூப்பின்படி நிரப்பப்பட்டது.
  • அதன்பின்பு 2007-2008 ஆம் கல்வியாண்டிற்கான 5882 காலிப்பணியிடங்களைநிரப்பஅரசாணை (அரசாணை 241 – நாள்.22.09.2007) பிறப்பிக்கப்பட்டது.
  • இந்நிலையில் வேலையில்லாஇடைநிலைஆசிரியர்நலஅமைப்பின் சார்பில் மதுரைஉயர்நீதிமன்றக்கிளையில் மாநிலபதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. (வழக்கு எண்கள் 6377 – 8474 – 10583 / 2007)

மதுரை உயர்நீதிமன்றமானது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்க இயலாது எனவும், வழக்கத்தில் உள்ள மாவட்ட பதிவு மூப்பின் அடிப்படையிலேயே பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி மேற்கண்ட வழக்குகளை 04.02.2008 அன்று தள்ளுபடி செய்தது.

  • இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2007-2008ஆம்ஆண்டுக்கானகாலிப்பணியிடங்கள் 5882ல், மேற்கண்ட வழக்கு 04.02.2008 அன்று வழக்குதள்ளுபடியானபின்பு, நியமனம்சார்ந்தபணிகள் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டு (24நாட்களில்) 28.02.2008அன்றுமாவட்டபதிவுமூப்பின்படி 2553 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. இதனால் 2007-2008ஆம்ஆண்டுக்கான 5882 காலிப்பணியிடங்களில் 3329 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் மீதமிருந்தன.
  • இந்நிலையில் 2007-2008ஆம்கல்விஆண்டிற்கானமீதமிருந்தகாலிப்பணியிடங்கள் 3329ஐ மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பகடிதம்பிறப்பிக்கப்பட்டது. (அரசுக்கடிதஎண் 34741/வ.செ.1/2007-2 நாள்.04.04.2008)
இதனால் வேலையில்லாஇடைநிலைஆசிரியர்நலஅமைப்பின் சார்பில் மதுரைஉயர்நீதிமன்றக்கிளையில் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலான நியமனம் கோரி உரிமைமேல்முறையீடு செய்தனர். (வழக்கு எண் 119 – 122 / 2008)
இம்மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை “இந்தியஅரசியலமைப்புச்சட்டம்விதி 16(2)ன்அடிப்படையில், இருப்பிடத்தைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பில்பாகுபாடுகாட்டக்கூடாது என்றும், இடைநிலை ஆசிரியர் நியமனமானது மாநிலபதிவுமூப்பின்படியே மேற்கொள்ளப்படவேண்டும் என்று 14.05.2008ல்தீர்ப்பு வழங்கியது.


2009 Teachers appoinment process pdf file : CLICK HERE 

இதற்கிடையில் 2008-2009 ஆம் கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்களையும் நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணைஎண் 112 – 30.05.2008)
இந்நிலையில் மாநிலபதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கஇயலாதுஎன்றுஅரசுதரப்பில் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. (SPL 18227 – 18228 / 2008).
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது “மாநிலபதிவுமூப்பின்படியேநியமனம்செய்யப்படவேண்டும் என்னும் மதுரைஉயர்நீதிமன்றக்கிளையின் தீர்ப்பையே உச்சநீதிமன்றமும் உறுதிசெய்யப்போவதை முன்னதாகவே அறிந்துகொண்ட அரசுத்தரப்பு மாநிலஅளவிலான பதிவுமூப்புபட்டியலை தயாரிக்குமாறு வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறைஇயக்குநர்அவர்களை 26.09.2008 அன்றே கேட்டுக்கொண்டது”. (அரசுநேர்முகக்கடிதஎண் 28972/எஸ்2/2008-1 நாள்.26.09.2008)
இந்நிலையில் மாநிலபதிவுமூப்பின்படியேநியமனம்செய்யப்படவேண்டும் என்னும் மதுரைஉயர்நீதிமன்றக்கிளையின்தீர்ப்பையேஉச்சநீதிமன்றமும்உறுதிசெய்து 20.10.2008ல்தீர்ப்பு வழங்கியது.

  • இதனால் உச்சநீதிமன்றதீர்ப்பின்படி,மாநிலபதிவு மூப்பின்அடிப்படையிலும்,மாவட்டமாறுதல்கோரக்கூடாதுஎன்ற நிபந்தனையுடனும் 2007-2008ஆம்ஆண்டுக்கானமீதமிருந்தகாலிப்பணியிடங்கள் 3329ஐநிரப்பஅரசுஆணையிட்டது. (அரசாணைஎண் 220 – 10.11.2008)

இச்சூழ்நிலையில்

  • மாநில பதிவுமூப்புவழக்குகாரணமாக 2007-2008க்கானகாலிப்பணியிடங்கள்முழுமையாகநிரப்பப்படவில்லைஎனவும்,
  • அரசாணைஎண் 112, நாள்.30.05.2008ன்படி 2008-2009ஆம்கல்விஆண்டிற்கானகாலிப்பணியிடங்களைநிரப்பிக்கொள்ளஅரசுஅனுமதிஅளித்துள்ளதாலும்
  • 2007-2008, 2008-2009 ஆகிய இரண்டுஆண்டுகளுக்குமானகாலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தமாக நிரப்பிக்கொள்ள அரசாணை 220ல் வழிவகை செய்யுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களால் அரசுக்குகருத்துரு அளிக்கப்பட்டது. (தொடக்கக்கல்விஇயக்குநரின்ந.க.எண். 7600/டி1/2008 நாள்.13.11.2008)
  • இயக்குநரின்கருத்துருவைஅரசுஏற்றுக்கொண்டுஅரசாணை 220ல்குறிப்பிடப்பட்ட “2007-2008ஆம்ஆண்டுக்கானஇ.நி.ஆகாலிப்பணியிடங்களைநிரப்ப”என்பதற்குப்பதிலாக “2007-2008 மற்றும் 2008-2009ஆம்ஆண்டுக்கானஇ.நி.ஆகாலிப்பணியிடங்களைநிரப்ப”மாற்றீடுசெய்துஅரசாணை வெளியிட்டது. (அரசாணைஎண் 237 நாள் 26.11.2008)

இந்த அரசாணை எண் 237 நாள்.26.11.2008ன் படியே 2009 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியமனம் பின்வருமாறு அமைந்தது.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவுப்பும் வேலைவாய்ப்புத்துறையின் பணிகளும்

  • ஆசிரியர் தேர்வு வாரிய விளம்பரம் – விளம்பர எண். 1 / 2009 – நாள்.12.01.2009
  • விண்ணப்பம்வழங்கும்தேதிஆரம்பம் – 22.01.2009
  • விண்ணப்பம்வழங்கும்தேதிமுடிவு – 09.02.2009
  • பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்கள்சமர்ப்பிக்ககடைசிநாள் – 11.02.2009
  • காலிப்பணியிடங்கள் – 4622 (2007-2008 & 2008-2009 இரண்டுகல்விஆண்டுக்கும்சேர்த்து)
  • விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட ஊதிய விகிதம் – 4500-125-7000
  • மாநிலஅளவிலானபதிவுமூப்புபட்டியலைவேலைவாய்ப்புத்துறைஇயக்குநர்அவர்கள்ஆசிரியர்தேர்வுவாரியத்திற்குஅனுப்பியநாள் – 20.01.2009, 05.02.2009 & 13.02.2009
  • www.employment.tn.gov.in/sgtsel.asp இணையதளத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியான தேதி – 20.02.2009.
  • லோக்சபா தேர்தல் – 2009
  • இந்நிலையில் ELECTION COMMISSION OF INDIA SCHEDULE FOR GENERAL ELECTIONS, 2009 அறிவித்தநாள் – 02.03.2009 (No. ECI/PN/13/2009)
  • லோக்சபாதேர்தல் – 2009 அறிவிப்புஎதிரொலியால்இடைநிலைஆசிரியர்நியமனசான்றிதழ்சரிபார்ப்புநிறுத்திவைக்கப்பட்டு செய்தித்தாள்களில்செய்திவெளியிடப்பட்டது.
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • ஆசிரியர்தேர்வுவாரியகுறிப்பாணைஎண்.5015/ஆ4/2008 நாள்.14.05.2009ன் படி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
  • சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஊதிய விகிதம் – 4500-125-7000
  • சான்றிதழ் சரிபார்த்தல் 31.05.2009க்கு முன்பே நிறைவடைந்து ஆசிரியர்தேர்வுவாரியகுறிப்பாணைஎண்.5015/ஆ4/2008 நாள்.22.06.2009ன் படி TRB ஆல் Selection Order வழங்கப்பட்டது.
  • TRB ஆல் வழங்கப்பட்ட Selection Order-ல் குறிப்பிடப்பட்ட ஊதிய விகிதம் – 4500-125-7000.

  • நியமன ஆணை வழங்குதல்
  • தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 020007/டி1/2009 நாள்15.07.2009 ன்படி 15.07.2009ல் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட நியமன ஆணையில் ஊதிய விகிதம் 5200-20200+த.ஊ2800என்றுகுறிப்பிடப்பட்டது.
  • நியமன ஆணை தாமதமானதற்கான உண்மை விபரமும் அதனால் ஏற்பட்ட ஊதிய பாதிப்பும்
  • 2006-2007ஆம் ஆண்டுக்கான 2353 காலிப்பணியிடங்கள் மார்ச்-2007ல் நிரப்பப்பட்டன.
  • 2007-2008ஆம் ஆண்டுக்கான 5882காலிப்பணியிடங்களில் 2553 பணியிடங்கள் பிப்ரவரி-2008 நிரப்பப்பட்டது.
  • 2008-2009ஆம் ஆண்டுக்கான 4622 காலிப்பணியிடங்கள் கடந்த கல்வி ஆண்டு நியமனங்களைப் போன்று பிப்ரவரி-2009க்குள் நியமனம் செய்வதற்காக ஜனவரி-2009லேயே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு மாநில அளவிலான பதிவுமூப்புப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
  • இந்நிலையில்தான் ஏப்ரல்-2009க்கான லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பிப்ரவரி-2009க்குள் நியமனம் செய்யப்படவேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் நியமன நடைமுறையானது நிறுத்தி வைக்கப்பட்டது.
  • 16-ஏப்ரல்-2009ல் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுற்ற நிலையில் பிப்ரவரி-2009க்குள் செய்யப்படவேண்டிய நியமனத்தை கல்வியாண்டின் இறுதி மாதமான ஏப்ரல்-2009லும் வழங்காமல் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள் 15.07.2009 அன்று நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவினால் 2009ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியமனமானது 01.06.2009க்கு முன்னரே (6-வது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே அனைத்துவிதமான நியமன நடைமுறைகளும் (Selection Process) நிறைவு பெற்ற நிலையிலும் 01.06.2009க்கு பின் பணியில் சேரும் சூழல் ஏற்பட்டது.
  • நியமன நடைமுறைகள் சார்ந்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைகளிலும் 4500-125-7000 ஊதிய விகிதம் குறிப்பிடப்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவில் Entry Level Pay 8370 + 2800தர ஊதியம் மொத்தம் 11170 வழங்கப்பட்டுள்ளது.
  • நியமன நடைமுறைகள் சார்ந்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைகளிலும் 5200+2800தர ஊதிய விகிதம் குறிப்பிடப்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவில் Entry Level Pay 5200 + 2800தர ஊதியம் மொத்தம் 8000 வழங்கப்பட்டுள்ளது.
  •  எனவே, நியமன நடைமுறைகள் சார்ந்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைகளிலும் 4500-125-7000 என்னும் ஊதிய விகிதம் குறிப்பிடப்பட்டு, அதற்குரிய Entry Level Pay 8370 + 2800தர ஊதியம் மொத்தம் 11170 வழங்காமல் 5200+2800தர ஊதிய நிலை குறிப்பிடப்பட்டதால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3170/- (8370 – 5200 = 3170) முரண்பாடு ஏற்பட்டது.
  • ரூ.3170/- ஊதிய முரண்பாட்டினைக் களையக்கோரி 2009ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம்.
  • அரசுக்கு தொடர்ந்து பல்வேறு கடிதங்கள் அனுப்பியும்,
  • உயர் அலுவலர்களிடம் ஆதாரங்களும் ஆவனங்களும் அடங்கிய கருத்துருக்கள் வழங்கியும்
  • ஊதிய முரண்பாட்டினைக் களையும் பொருட்டு அரசால் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்ட பல்வேறு ஊதியகுறைதீர் குழுக்களிடம் முறையீடு செய்தும் தீர்வு கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
  • 2010ஆம் ஆண்டு திரு ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழு:
    • குழு ஆய்வு செய்தது   – மத்திய அரசுக்கு இணையான ஊதியம்
    • குழு பரிந்துரைத்ததது    –    இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்புப்படி.
    • குழு கூறிய காரணங்கள் -ஆசிரியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அரசுக்கு அதிக நிதிச்சுமை போன்ற பல காரணங்கள்.
  • அரசாணை நிலை எண்.23 நிதித்(ஊதியபிரிவு)துறை நாள்.12.01.2011:
    • அரசாணைப்படி வழங்கப்பட்டது-   இடைநிலைஆசிரியர்களுக்கு ரூ.750தனிஊதியம்.
    • அரசு கூறிய காரணங்கள் –    அமைச்சுப்பணியாளர்கள் இடைநிலை ஆசிரியர்கள் இடையிலான ஊதிய வித்தியாசம் மேலும் கூடுதலாகி முரண்பாடான நிலை உருவாகும்.
  • 2011ஆம் ஆண்டு ஊதியகுறைதீர்க் குழு:
    • குழு பரிந்துரைத்ததது         –    ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
    •  ALL GOVT ORDERS  & PROCEEDINGS

      குழு கூறிய காரணங்கள் –    ஆசிரியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அரசுக்கு அதிக நிதிச்சுமை போன்ற பல காரணங்கள்.
    • இவ்வாறாக,
    • 6-வது ஊதியக்குழு அரசாணை எண்.234 நிதித்(ஊதியக்குழு) துறை, நாள்.01.06.2009,
    • 2) 6-வது ஊதியக்குழு அரசாணை எண்.258 நிதித்(ஊதியக்குழு)துறை, நாள்.23.06.2009,
    • 3) 2010ஆம் ஆண்டு திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப அவர்களது தலைமையில் ஒருநபர் குழு,
    • 4) அரசாணை நிலை எண்.23 நிதி(ஊதிய பிரிவுத்)துறை நாள்.12.01.2011,
    • 5) 2012ஆம்ஆண்டு திரு கிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களது தலைமையிலான ஊதியகுறைதீர்குழு,
    • ஆகிய அனைத்து அரசாணைகளிலும், குழுக்களிலும் 


  • தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 9300+4200=13500 வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை மட்டுமே ஆய்வு செய்து, முடிவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 9300+4200=13500 வழங்குவது சாத்தியமில்லை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர,
  • 31.05.2009க்கு முன்பே தெரிவுசெய்யப்பட்டு நிர்வாகக் காரணங்களால் 01.06.2009க்கு பின்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு ரூ.3170ஐ சரிசெய்வதற்கு பல சாத்தியக்கூறுகள் இருந்தும், 31.05.2009க்கு முன்பே தெரிவுசெய்யப்பட்டு நிர்வாகக் காரணங்களால் 01.06.2009க்கு பின்பு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடான ரூ.3170-ஐக் களைவது குறித்து ஆய்வு செய்யவில்லை.
  • இதனால் பிப்ரவரி-2009 ல் நியமனம் செய்யப்படவேண்டிய 7000 ஆசிரியர்களின் நியமனமானது நிர்வாகக்காரணம், தேர்தல் அறிவிப்பு காரணமாக தாமதமானதால் ஏற்பட்ட ஊதிய இழப்பு ரூ.3170/- 2009லிருந்து நாளதுவரை களையப்படவில்லை. மேற்படி முரண்பாடானது 7000 ஆசிரியர்களுக்கு மட்டும் நியமன நடைமுறைகளின் காலதாமத்தால் ஏற்பட்ட முரண்பாடாகும்.
  • இவ்வாறு பணியேற்ற நாளின் அடிப்படையில் பணிப்பயன், பணப்பயன் ஆகிவற்றில் ஊதிய முரண்பாடு ஏற்படும்போது நியமனத்திற்கான அறிப்பாணை வெளியிடப்பட்ட நாளையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் பழைய ஓய்வூதியத்திட்டம் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளில் அறிவிப்பாணை நாளையே கட்-ஆப் நாளாகக் கொண்டு புதிய ஓய்வுத்திட்டத்திலிருந்த காவலர்களை பழைய ஓய்வுத்திட்டம் பெறத் தகுதி உள்ளவர்கள் எனத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • அத்துடன் கல்வித்துறையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பின்பு தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கக் கோரிய பல்வேறு வழக்குகளில் அறிவிப்பாணை வெளியிடப்பட்ட தேதியையே எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஒரு நபர் குழு-2010 அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.340 நிதித்துறை(செலவினம்) நாள்.26.08.2010 பக்கம்-2 வரிசை எண்.4ல்
  • என்று குறிப்பிட்டு,
  • பணியாளர் ஒருவர் 01.06.2009க்கு முன்பு அரசுப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டு, நிர்வாகக்கார்ணங்களால் 01.06.2009 அன்றோ அல்லது 01.06.2009க்கு பிறகோ பணியில் சேர்ந்ததை சிறப்பினமாகக் கருதி, பணியாளரைத் தெரிவு செய்யும்போது குறிப்பிடப்பட்ட பழைய ஊதிய விகிதத்திலேயே (அதாவது 5வது ஊதியக்குழு ஊதிய விகிதத்திலேயே) ஊதிய நிர்ணயம் செய்து,


    அதனடிப்படையில் 6-வது ஊதியக்குழுவிற்கான புதிய ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் ஊதிய விதித்தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பாணை எண்.5261/தொகுதி நான்கு/2008, நாள்.12.11.2008ன் படி சுருக்கெழுத்து தட்டச்சராக, 
  • 01.06.2009க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.07.2009-ல் நியமனம் பெற்ற பணியாளருக்குஅரசாணை எண்.340 நிதித்துறை நாள்.26.08.2010- ஆதாரமாகக் குறிப்பிட்டு, 01.06.2009-க்கு முன்பு உள்ள பழைய ஊதிய விதத்திலேயே ஊதிய நிர்ணயம் செய்து 01.08.2010 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம்”, என்று தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர் / கருவூலக் கணக்கு ஆணையர், ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகம், நந்தனம், சென்னை-35 அவர்களின் ந.க.எண்.10612/டி2/2018,  நாள்.23.03.2018ன்படி தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Advertisement Notification எண்.01/2009 நாள்.12.01.2009ன் படி 31.05.2009க்கு முன்பே அனைத்துவிதமான selection process-களும் முடிந்து நிர்வாகக்காரணங்களால் 01.06.2009க்கு பின் பணியில் சேர்ந்த 6849 இடைநிலை ஆசிரியர்களுக்கும்,மேற்குறிப்பிட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பாணை மூலம் ஊதிய விதித்தளர்வினைஅனுமதித்து 01.06.2009-க்கு முன்பு உள்ள பழைய ஊதிய விதத்திலேயே ஊதிய நிர்ணயம் செய்வதன் மூலம் (Entry Level Pay 8370+2800=11170-ஐ வழங்கி) ரூ.3170 ஆல் ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை 7000 ஆசிரியர்களுக்கும் களைந்திட 2009ஆம் ஆண்டு நியமன ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்பாக செயல்பட்டு உரிய தீர்வுக்காக கடந்த 13 ஆண்டுகளாக போராடிவருகிறோம் என்று இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்குழு (before 01.06.2009 Appointment process ) என 
  •  ஒருகினைப்பாளர் ச.முனீஷ் அவர்கள் தெரிவித்தார் 
  • செல் :81444 11881

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459