CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் நாளை நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற மகத்தான போராளி மேனாள் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன் அவர்கள் வருகை தர உள்ளார்.
எனவே, நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் நாம் அனைவரும் பங்கு பெறுவோம்.
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
24 மணி நேர காத்திருக்கும் போராட்டம் நடத்த ஆலோசணைகள்
1) மாவட்ட அளவில் கூட்டத்தை நடத்தி திட்டமிட வேண்டும்
2) துண்டு பிரசுரம் சுவரொட்டி பேனர் அச்சடிக்க வேண்டும்
3) அரசு ஊழியர் ஆசிரியர்கள்களிடம் பிரசசாரம் செய்ய வேண்டும்
4) செலவுகளை ஈடுகட்ட நிதி வசூல் செய்ய வேண்டும்
5) காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க வேண்டும்
6) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வாய்ப்புள்ள அரசு அலுவலகத்தில் காத்திருப்பு நடத்த வேண்டும்
7) பந்தல் நாற்காலி ஒலிபெருக்கி இரவில் ஒளிவிளக்கு,இரவு தங்க தார்பாய் அல்லது சமுக்காளம் ஏற்பாடு செய்ய வேண்டும்
8) 25 ம் தேதி மதியம் மற்றும் இரவு 26 ம் தேதி காலை உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்
9) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இரவு தங்க போர்வை மாற்று உடை பற்பசை பிரஸ் மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள் மாத்திரைகள் மற்றும் தேவையான பொருட்களுடன் வருவதை உறுதிசெய்ய வேண்டும்
10 இரவில் அதிகமான ஊழியர்கள் தங்க வேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்கள் இரவில் அவசியம் தங்க வேண்டும். இரவில் பெண் ஊழியர்கள் தங்கினால் தான் அரசு மற்றும் ஊடகங்கள் கவனம் ஈர்க்கப்படும்
11) போராட்டத்தில் பங்கேற்கும் எண்ணிக்கையை உயர்ந்த முயற்சி செய்ய வேண்டும். எண்ணிக்கை குறைவாக இருப்பதால் போராட்டத்தை நடத்தாமல் இருக்க கூடாது. எத்தனை நபர்கள் பங்கேற்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை.எத்தனை மாவட்டங்களில் நடைபெறுகிறது என்பதுதான் கவனத்தில் கொள்ளப்படும். எனவே, அதிகமான இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
மாநில மையம்
No comments:
Post a Comment