இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். தற்போது சண்டிகர், ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டது.
அதற்கு பதிலாக புதிய ஓய்வூதியத்திட்டத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் படியான திட்டங்களை மத்திய நிதியமைச்சகம் வடிவமைத்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு குழுவை நியமித்துள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் வழங்குவது குறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இந்த புதிய மாற்றங்களை மாநில அரசுகள் ஏற்குமா?
TEACHERS NEWS |
No comments:
Post a Comment