இந்திய வன அதிகாரி பணிக்கான இறுதி தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இந்திய வனத் துறையின் கீழ்வரும் வன அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் எனமொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள்நடைபெறும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு 150 வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டது. அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபரில் நடத் தப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான முதன்மைத் தேர்வு நவம்பர் 20 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
அதன்படி நேர்முகத் தேர்வு டெல்லியில் கடந்த ஜூன்மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேர்முகத் தேர்வு முடிவுகளையுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
இதில் 147 பேர் வன அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவில் 39, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 21, ஓபிசி பிரிவில் 54,எஸ்சி பிரிவில் 22, எஸ்டி பிரிவில்11 பேரும் என மொத்தம் 147 பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியலையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment