மாநில அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள் / ஆங்கிலோ பழங்குடியினர் இந்தியப் பள்ளிகள் / சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 - ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது . விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ .10,000 ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ரொக்கப் பரிசும் , ரூ .2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும் , பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது . பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து அரசாணை வெளிடப்பட்டுள்ளது.
அரசாணையில் தற்போது பின்வரும் எண்ணிக்கை அடிப்படையில் 38 வருவாய் மாவட்டத்திற்கு கீழ்கண்டவாறு விருதுகள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment