இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த ஆண்டில் 1,56, 278 பேருக்கு இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு 1,76,744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டை விட 20 ஆயிரம் பேர் வரை கூடுதலாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லுாரிகள் தேர்வில் போட்டி அதிகரித்துள்ளது.
கிடைப்பது கடினம்
மொத்தம் 195ல் இருந்து 170க்குள் கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 100 பேர் முதல் அதிகபட்சம் 2,000 பேர் வரை இந்த ஆண்டு அதிகமாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் 170க்கு மேல் கட் ஆப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை போன்றே கல்லுாரிகள் பாடப்பிரிவுகள் கிடைக்கும். இந்தாண்டு இன்ஜினியரிங் இடங்கள் அதிகரித்தால் இந்த பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண் 0.50 அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கட் ஆப் மதிப்பெண் 160ல் இருந்து 170க்குள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு கிடைத்தது போன்ற கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு கிடைக்கும். 150ல் இருந்து 160 பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை விட கட் ஆப் அளவு சற்று அதிகரிக்கும்.
ஆனால், 100க்கு மேல் 30 ஆயிரம்; 120க்கு மேல் 25 ஆயிரம்; 140க்கு மேல் 11 ஆயிரம் பேர் என,கடந்த ஆண்டை விட அதிகம் பேர் உள்ளதால் இந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லுாரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம். ஆனால் குறைந்த மதிப்பெண் உள்ள மாணவர்கள் சேரும் பல கல்லுாரிகள் அதிக தேர்ச்சியை தருவதையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களது விருப்ப கல்லுாரியையும், பாடப்பிரிவையும் முடிவு செய்ய வேண்டும்.போட்டி அதிகரிப்புஇதற்கு தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, நான்கு ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லுாரி விபரங்களை பார்த்து கொள்வதும் நல்லதாகும்.
அதேபோல், விருப்ப பதிவு செய்யும் போது ஏராளமான விருப்ப பாடங்களை, சாய்ஸ் ஆகக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொது தேர்வில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் குறையவில்லை. எனவே கட் ஆப் அதிகரித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் போட்டியும் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment