ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை உடன் நடத்த கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/06/2023

ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை உடன் நடத்த கோரிக்கை!

 பள்ளிக்கல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்களில் தமிழ் பாடத்தில் 1058, ஆங்கிலத்தில் 559, கணிதத்தில் 416,அறிவியலில் 1095,சமூக அறிவியலில் 892 என மொத்தம் 4020 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிற துறைகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற காத்திருக்கின்றனர்.

Join Telegram

 குறிப்பாக மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் மதுரை ,தேனி மற்றும் திண்டுக்கல்லில் பணிபுரியும் வட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனத்திலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக தங்களது குடும்பத்தை பிரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது தடையின்மை சான்றும் பெற்று கலந்தாய்வுக்கு தயாராக உள்ளனர். 


மேலும் தென் மாவட்டங்களைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வட மாவட்டங்களில் தங்களது குடும்பத்தினரை பிரிந்து  பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடந்து அங்கிருக்கக்கூடிய வடமாவட்டங்களைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் வெளியேறும் நிலையில் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களில் பணியேற்கலாம் என காத்திருத்துக் கொண்டிருக்கின்றனர்.


மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள் அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை மாணவர்களின் நலன் கருதி EMIS இணையதளத்தில் உடனடியாக நடத்த வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459