மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை ” எனும் " பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் " மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது .
இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பொருள் சார்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மாவட்ட அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகும்போது , மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து புன்னகை " திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment