பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அனுமதியுடன் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு மாநில உயர் கல்வித் துறையின் அங்கீகாரமும் கட்டாயம்.
எந்தெந்த படிப்புக்கு அரசு அங்கீகாரம் அளிக்கிறதோ அந்த படிப்புகளை அரசு பணியில் சேருவதற்கு தகுதியானதாக உயர் கல்வித் துறை அங்கீகரிக்கும்.
சமீப ஆண்டுகளாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாணவர்களை கவரும் வகையில் வித்தியாசமான பெயர்களில் பட்டப் படிப்புகளை உருவாக்குகின்றன.
அவற்றுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்று மாணவர்களை சேர்க்கின்றன. ஆனால் கல்லுாரிகள் நடத்தும் அனைத்து படிப்புகளும் அரசு வேலைக்கான பிரதான படிப்புக்கு தகுதியானதல்ல. ஒவ்வொரு ஆண்டும் அரசு வேலைக்கு தகுதியற்ற படிப்புகள் எவை என்பதை உயர் கல்வித் துறை பட்டியலாக வெளியிட்டு வருகிறது.
ஆனாலும் மாணவர்கள் சரியான விழிப்புணர்வு இன்றி பல்வேறு பெயர்களில் உள்ள படிப்புகளில் சேர்ந்து விட்டு பின் வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகளுக்கும் உயர் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் எல்லா பல்கலைகளும் தங்கள் இணைப்பில் உள்ள கல்லுாரிகள் நடத்தும் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதா என ஆய்வு செய்ய வேண்டும்.
தகுதியற்ற படிப்புகளை நடத்த சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமிக் கவுன்சில்களில் அனுமதி வழங்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment