ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது; 11 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை, மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பெறும் ஒவ்வொரு உயர் கல்வி தகுதிக்கும், இரண்டு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக வைத்து, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை, அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், அடுத்த மாதம் 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment