முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT New Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/06/2023

முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT New Proceedings

 IMG_20230622_110603


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ( Teacher Professional Development ) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி 19.06.2023 அன்று நடத்தப்பட்டது.


 இரண்டாம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி 21.06.2023 மற்றும் 22.06.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. பெறும் . பார்வை 3 இல் காணும் செயல்முறைகளின்படி 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 24.06.2023 அன்று குறு / வட்டார வளமைய கூட்டம் நடைபெறவுள்ளதால் , அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459