அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு வருகிற 14-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்ட் பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 14 (புதன்கிழமை) முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment