பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தால், பிளஸ் 1ல், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மாணவர்கள் கேட்கும் பாட தொகுப்பில் சேர்க்கை வழங்க, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற முக்கிய பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுகின்றன.
சில அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியர், முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றும், பிளஸ் ௧வகுப்பில், அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு தொகுப்புகளில் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புகார்கள் சென்றுள்ளன. அதேபோல, 14417 என்ற உதவி எண்ணுக்கும், மாணவர்கள், பெற்றோர் தரப்பில் குறைகளை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தால், மாணவர்கள் விரும்பும் பாட தொகுப்பில், தவறாமல் சேர்க்கை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, புகார் எழுந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment