TNPSC HALL TICKET PUBLISHED - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/05/2023

TNPSC HALL TICKET PUBLISHED

 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2023, நாள் 12.01.2023 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 20.05.2023 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 21.05.2023 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.


தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான  www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண். பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459