TNPSC -ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலை பணி 1,083 பணியிடத்துக்கு 50 ஆயிரம் பேர் எழுதினர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/05/2023

TNPSC -ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலை பணி 1,083 பணியிடத்துக்கு 50 ஆயிரம் பேர் எழுதினர்

 ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் அடங்கிய 1,083 இடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் காலியாக உள்ள 794 இடங்கள், நெடுஞ்சாலை துறை இளநிலை வரைதொழில் அலுவலர் 236 இடம்.


பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 18 இடம், நகர் ஊரமைப்பு துறையில் வரைவாளர்(கிரேடு 3) 10 இடம், சிறுதொழில் நிறுவனத்துறையில் முதலாள்(கிரேடு 2) 25 இடங்கள் என ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 1,083 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டது.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 52,025 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 40,616 பேர், பெண்கள் 11,407 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதள் தாள் தேர்வு நடந்தது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 2ம் தாள் தேர்வும், அதாவது கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும், பொது அறிவு தேர்வும் நடந்தது.


இத்தேர்வுக்காக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 133 இடங்களில் 172 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடந்தது. சென்னையை பொறுத்தவரை 29 இடங்களில் 30 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடந்தது.


தேர்வு கண்காணிப்பு பணியில் 172 தலைமை கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். தேர்வு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கூறினர். அதே நேரத்தில் தேர்வு எழுத நிறைய பேர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459