அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில், இலவசமாக தோட்டம் அமைக்கும் பணிகளை, தோட்டக்கலைத் துறை துவங்கி உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே, பழங்கள், காய்கறிகள், மூலிகை செடிகள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தோட்டக்கலைத் துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக, அரசு கல்வி நிலையங்கள் மட்டுமின்றி, காப்பகங்களிலும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, இலவசமாக தோட்டம் அமைத்து தரப்பட உள்ளது.
இந்த தோட்டங்களில், மாமரம், சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா, வாழை, பப்பாளி, முருங்கை, முள்ளங்கி கீரை, துளசி, கற்பூரவள்ளி, கற்றாழை, புதினா, பிரண்டை, வெட்டிவேர். கறிவேப்பிலை, தென்னங்கன்று ஆகியவை நடவு செய்யப்பட உள்ளன.
தோட்டங்களை மாணவர்கள் பராமரிக்கும் வகையில், களைவெட்டி, மண்வெட்டி, பூவாளி, மண் கிளறும் கருவி, கவாத்து கத்தரி ஆகியவையும் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு கல்வி நிலையத்துக்கும் 8,000 ரூபாயை, தோட்டக்கலைத் துறை மானியமாக வழங்கவுள்ளது. கத்திரி வெயில் முடிந்ததும், இதற்கான நடவு பணிகள் துவங்கவுள்ளது.
No comments:
Post a Comment