அரசு துறைகளில், சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில், தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு அலுவலருக்கு விலக்களிக்க, 1984ம் ஆண்டு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர், 53 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும்.
தேர்வுகளில் தேர்ச்சி பெற, குறைந்தது ஐந்து முறைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இந்த சலுகையை அடையும் அளவுக்கு, அவரது பணிக் குறிப்புகள் மன நிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த, 2021ம் ஆண்டு ஓய்வு பெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்டது. எனவே, சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில், தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க, 53 வயது இருக்க வேண்டும் என்பதை, 55 வயதாக உயர்த்த, அரசு முடிவு செய்தது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment