அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறைவாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவை, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.
No comments:
Post a Comment