பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/05/2023

பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு.

 📚சென்னை: பள்ளி நிர்வாக பணிகளுக்கு, பழைய காகித கோப்பு முறையில் இருந்து, 'டிஜிட்டல்' முறைக்கு மாறும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


📚கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


📚பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.


📚பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், அதிகாரிகளின் பணிகள்; அரசின் எதிர்பார்ப்புகள்; அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்த நிகழ்வில், சி.இ.ஓ.,க்கள் தங்கள் 'லேப்டாப்'புடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


📚அப்போது, பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதோடு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'எமிஸ்' இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். 


📚இன்னும் பழைய காகித கோப்பு முறையிலேயே இருக்காமல், நவீன முறையில், லேப்டாப் மற்றும் கணினியை பயன்படுத்தி, டிஜிட்டல் நிர்வாகத்துக்கு மாற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459