தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல்,
கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட . பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாணவி நந்தினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் இன்று, மாணவி நந்தினி, முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்ந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை அவரது ட்விட்டர் பக்கத்தில், “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் “படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்” எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்’ என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment