பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்தார்.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவருமான ராமநாதபுரத்தில்
தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 53,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்குதல், மாநில, தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற 70 மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருது உள்ளிட்ட ஐம்பெரும் விழாவை வரும் 21-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த உள்ளோம். இதில் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையான பழைய முக்கிய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல், சரண்டர் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு குறித்து 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்தி வரு வருகிறது. அதனால் கோட்டையை முற்றுகையிடும் போராட் டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். அமைச்சர் குழுவினர் முதல்வரிடம் பேசி நல்ல முடிவை அறிவிப்பர். அரசு பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்த வேண்டும். கழிப் பறைகளை பராமரிக்க ஆட்களை நியமிக்க வேண்டும். தற்போதைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.1.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. நீதிமன்ற வழக்குகளால் பதிய நியமனங்கள் நடைபெறாமல் உள்ளன. அங்கள் வாடி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்டோ-ஜியோ ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்ளீட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment