அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/05/2023

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்

 998226

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (மே 29) தொடங்குகிறது.
Join Telegram


தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 20-ம் தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.


முதல் 2 நாட்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல்கட்டமாக ஜூன் 1 முதல் 10-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும்.


தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.


பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளைத் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459