சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு எஸ்.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிஎச்டி பட்டதாரிகள் நேரடியாகப் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழக விசாரணை மையத்தில் ரூ.25 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே மாதம்22-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Join Telegram
No comments:
Post a Comment